Advertisment

நடிகர் விஜய், தோனி சந்திப்பு... வைரலாகும் புகைப்படங்கள்!

vijay

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றுவருகிறது.

இந்த ஸ்டூடியோ வளாகத்தினுள் அமைந்துள்ள மற்றொரு அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. அதற்காக வருகை தந்த தோனியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டதோடு, சிறிது நேரம் கேரவேனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

actor vijay Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe