'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு IARA (சர்வதேச சாதனையாளர்களுக்கான அங்கீகாரம்) சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. நேற்று லண்டனில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay iara award

லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வருடம் தோறும் வழங்கும் இந்த விருதுகள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகர்கள், படைப்பாளிகள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் முழுக்க முழுக்க ரசிகர்களின் ஓட்டின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பாகவே விஜய் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தி வந்தது. சமூக ஊடகங்களின் மூலம் பரப்பிய விஜய் ரசிகர்கள் அதிக அளவில் வாக்களித்து இந்த விருதை வெல்லச் செய்துள்ளனர்.

Advertisment