Advertisment

"நீங்க சாப்டீங்களா..." - குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

actor vijay fulfills young fan who expressed her wish to meet him

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கக்கூடிய நடிகராக இருக்கும் விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை "என்னை பார்க்க வரமாட்டீங்களா..." என விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் அந்த வீடியோ குறித்த விவரம் விஜய் காதுக்கு போக, அந்த குழந்தையை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டுகுழந்தையிடம்ஜாலியாக சிரித்து பேசியுள்ளார் விஜய். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் நலம் விசாரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

actor vijay child
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe