actor vetri speech at Memories movie press meet

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள படம் மெமரீஸ். இப்படத்தில் பார்வதி அருண் நாயகியாக நடிக்க ரமேஷ் திலக் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

நாயகி பார்வதி அருண் பேசியதாவது, "இதுதான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும்" என்றார்.

Advertisment

நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடமாக பேசிக்கொண்டே இருந்த படம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப் படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள்" என்றார்.

இயக்குநர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும்போது படம் எளிதாகப் புரியும். இந்தப் படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்" என்றார்.

இயக்குநர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளிதமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காககேரளாவில் தயாரிப்பாளர் தேடினபோது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக் கொண்டார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.