கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.
அந்தவகையில், 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் நாயகனாக நடித்த நடிகர் வெற்றி, 5 லட்சம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதில் 4 லட்ச ருபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 1 லட்ச ருபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்படதொழிலாளர்களுக்கும் வழங்கினார். மேலும் இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. ''COVID-19 ஐ எதிர்த்துப் போராட வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் நாங்கள் செய்த சிறு உதவி'' என பதிவிட்டுள்ளார்.