Skip to main content

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார். 

 

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விடாமுயற்சி திருவினையாக்கும்” - தொடர் அப்டேட்டில் படக்குழு 

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
aijth vidamuyarchi update

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. 

பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து சண்டைக் காட்சிகளில் அஜித் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. 

aijth vidamuyarchi update

இந்த நிலையில் தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் படக்குழு தற்போது, அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அஜர்பைஜான் மற்றும் பாகு ஆகிய பகுதிகளில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பை முடித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விடாமுயற்சி திருவினையாக்கும் எனவும் பதிவிட்டு குரூப் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளனர். 

Next Story

விடாமுயற்சி - வெளியான புது அப்டேட்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
vidamuyarchi third look poster released

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. 

பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து சண்டைக் காட்சிகளில் அஜித் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு வருகிறது. 

அந்த வகையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான போஸ்டர்களில் அஜித் மற்றும் இருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய போஸ்டரில் அஜித்துடன் த்ரிஷாவும் இடம்பெற்றுள்ளார். மேலும் அஜித் புது தோற்றத்தில் இருக்கிறார். இப்போஸ்டர் தற்போது சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து போஸ்டர்களை வெளியிடும் படக்குழு விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.