Advertisment

அம்மாவிற்குப் பிறகு நான் பெரிதும் மதிப்பது உங்களைத்தான்! -வடிவேலு நெகிழ்ச்சி!

ACTOR -VAIGAI PUYAL - VADIVELU - THANKSGIVING - CINEMA ENTRY

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த நாள் கடந்த 12- ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வடிவேலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Advertisment

அதில், "செப்டம்பர் 12 எனது பிறந்த நாள். மக்களைச் சிரிக்க வைப்பதன் மூலம் நான் தினம் தினம் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன்.என்னைப் பெற்ற தாயிற்கு நன்றி கூறுகிறேன். அம்மாவிற்குப் பிறகு நான் பெரிதும் மதிப்பது மக்களாகிய நீங்கள்தான். இந்த மக்கள் சக்தி இல்லையென்றால், வடிவேலுவே கிடையாது. மக்களால்தான் மக்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறேன்.

Advertisment

இன்னொரு கேள்வி கூட நீங்கள் கேட்கலாம்? ஏன் இன்னும் நடிக்காம இருக்காருன்னு... சீக்கிரமே, மிகப் பெரிய அருமையான எண்ட்ரியோட நான் வருவேன். எல்லோர் வாழக்கையிலும் சாத்தான், சகுனின்னு இருக்கத்தானே செய்யும். அது என் வாழ்கையில இல்லாம இருக்குமா!" என்று கூறியுள்ளார்.

birthday special video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe