actor thurai sudhakar function

நடிகர் துரை சுதாகரின் மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ‘களவாணி’ படம் மூலம் வில்லனாக வந்த துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகர், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் அவரது வீட்டின் நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள்.

Advertisment

அந்த வகையில், துரை சுதாகரின் இளைய மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கடந்த 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், மேயர் சண். ராமநாதன் மற்றும் நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர். அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.