Advertisment

பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்!

Theepetti Ganesan

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவர், சமீபகாலமாக போதிய பட வாய்ப்புகள் இன்றி பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தீப்பெட்டி கணேசன், திடீர் மாரடைப்பால் நள்ளிரவு காலமானார். இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கரோனா நெருக்கடிநிலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது பால் வாங்குவதற்குக் கூட தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி தீப்பெட்டி கணேசன் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

theepetti ganesan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe