Advertisment

"யாஷிகா ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல..." - உமாபதி s/o தம்பி ராமையா

'மணியார் குடும்பம்' திரைப்படத்தின் நாயகனும் நடிகர், இயக்குனர் தம்பி ராமையாவின் மகனுமான உமாபதி 'பிக்பாஸ்' புகழ் யாஷிகா குறித்து பகிர்ந்தது...

Advertisment

umapathy yashika

"இந்தப் படத்தில் ஒரு கலகலப்பான நாட்டுப்புற இசை பாடல் வரும். அதுல நடிக்க ஹிந்தி முகத்தோட ஒரு டான்ஸர் தேவைப்பட்டாங்க. ஹிந்தி இண்டஸ்ட்ரில எல்லாம் ஆர்ட்டிஸ்ட் தேடிட்டு இருந்தோம். அந்த நேரத்தில் யாஷிகா இன்ஸ்டாகிராமில் பிரபலம். அதனால் அவங்கள ட்ரை பண்ணலாம்னு பண்ணி இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க. நடிக்கும்போது எனக்கு நல்ல தோழியாகிட்டாங்க.

பிக்பாஸ் பொருத்த வரையில் பல பேர் அவரோட பிஹேவியர் பற்றி சொல்றாங்க. நானும் பார்த்தேன். 'ஏன் அவங்க இப்படி பண்றாங்க'ன்னுதான் எனக்கும் தோணுச்சு. ஏன்னா அது அவங்களோட 'கேரக்டர்' கிடையாது, மத்தவங்க தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பொன்னம்பலம் சார்கிட்ட பேசறாங்க, அது ஏன்னு தெரியல, அவங்களோட இடத்தில் இருந்து பார்த்தாதான் தெரியும். ஆனா பிக்பாஸில் இருந்து வெளிய போறவங்க எல்லாரும் அவங்கள 'ட்ரூ ஹார்ட் (true heart), கைன்ட் பர்சன்' (kind person) அப்படின்னுபாஸிட்டிவாதான் சொன்னாங்க. அதுதான் அவங்களோட உண்மையான கேரக்டர். எல்லாரும் அவங்கள அடுத்த 'ஓவியா'ன்னு சொல்றாங்க, ஆனா அப்படிலாம் இல்லை. காரணம் ஓவியா ஒரு டெம்ப்ளேட் கொடுத்துட்டு போய்ட்டாங்க. அதனால இவங்க என்னதான் முட்டி மோதி தலைகீழா நின்னாலும் அவுங்களாக முடியாது. எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைச்சாலும் நான் கண்டிப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் போகமாட்டேன். ஏன்னா அங்க நடக்கிறத அப்படியே 'ரியலிஸ்டிக்கா' காட்டிட்டா பிரச்சனை இல்லை, சில இடத்தில் 'அப்ஸ் அண்ட் டௌன்ஸ்' இருக்கு.

thambiramiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe