நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது

 Actor thadi Balaji wife Nithya arrested

தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

நித்யா தனது குழந்தையுடன்சென்னைமாதவரம் பகுதிசாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். நித்யா வசித்து வரும் அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நித்யா நேற்று நள்ளிரவுஅந்த ஆசிரியரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். காலை எழுந்து தனது காரை பார்த்த ஆசிரியர் சேதமடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது சேதப்படுத்தியது நித்யா தான் என்பது அந்த ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நித்யா மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

actorbalaji
இதையும் படியுங்கள்
Subscribe