Advertisment

'ஜெய் பீம்' சர்ச்சை குறித்து முதல் முறையாக மனம் திறந்த சூர்யா

actor surya talk about jai bhim movie

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

Advertisment

இவ்விழாவில் பேசிய சூர்யா," கரோனாநமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை வருடம் கழித்து உங்களை சந்திக்கிறேன். எதற்கும் துணிந்தவன் படம் நல்லாவந்துருக்கு. சத்யராஜ் மாமா கூட இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியா இருந்தது. சத்யராஜ் மாமாக்கும்எங்க குடும்பத்துக்கும் 45 வருஷத்துக்கு மேல பழக்கம் இருக்கு. என்னுடைய எந்த வெளிப்பாடா இருந்தாலும், கோவமா இருந்தாலும், வருத்தமா இருந்தாலும் அது எல்லாம் உங்களுக்காகத்தான். உங்களாலதான் நான். அதனாலஉங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்குதுன்னு தோணும்போது அதை வேடிக்கைபார்த்திக்கிட்டுஇருக்க முடியாது. எப்போ பேசணுமோ அதை சரியா பேசணும். அப்போஒரு விஷயம் பேசுவேன். ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் ஒரு சிலருக்கு சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டன. அது தற்காலிக பிரச்சனைதான். அதை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். அந்த பிரச்சனையில் என்னுடைய ரசிகர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அதை இந்த வயதிலும் பக்குவத்துடன் கையாண்டீர்கள். அதனாலதான்சொல்றேன்நீங்கள்தான் எதற்கும் துணிந்தவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு நிறைய இருக்கு. அந்த மாற்றத்திற்கு தயாராக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

actor surya Etharkkum Thunindhavan jai bhim priyanka mohan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe