Advertisment

"உழவே தலை" - வேளாண் சட்டம் வாபஸ் குறித்து சூர்யா கருத்து!

actor surya talk about farm laws repeal

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பலரும்தங்களின் ஆதரவையும் கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="502c93ad-a881-4693-829b-812634cd0fb8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_72.jpg" />

Advertisment

இந்த நிலையில், நடிகர் சூர்யாவேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"உழவே தலை, விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor surya farm bill
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe