Advertisment

"வடிவேல் இல்லாம போரடிக்குது... நடிக்கச் சொல்லுடா" - 'சாரைப்பாம்பு' சுப்புராஜிடம் வருத்தப்பட்ட விஜயகாந்த்!

சாரப்பாம்பு சுப்பராஜை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. 70களின் இறுதியில் சினிமா துறைக்கு வந்து 80களில் உதவி இயக்குநராக இருந்து, தற்போது நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர். இவருக்கும் வடிவேலுக்கும் இடையேயான தொடர்பு சொல்லித் தெரியவில்லை. பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். படம் நடிப்பதற்கு முன்பே வடிவேலுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. வடிவேல் ராஜ்கிரண்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் படத்தில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்துள்ளார். கால சூழ்நிலையால் துணை இயக்குநராக இருந்தவர், நடிகராக மாறிய நிலையில், விஜயகாந்தோடு நல்ல நெருக்கத்தில் இருந்துள்ளார்.

Advertisment

h

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரான சமயத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பற்றி அவரே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " எனக்கு, விஜயகாந்த் அண்ணனும், வடிவேலும் ரொம்ப பழக்கம். வடிவேலுவை அவன், இவன் என்று சொல்லுமளவுக்கு எனக்கு பழக்கம் உண்டு. அவர் என்னை அண்ணன் என்று மரியாதையாக அழைக்கும் பழக்கம் உடையவர். தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் அண்ணனை திட்டியது தொடர்பாக நான் வடிவேல் கிட்ட நேரடியாவே கோவப்பட்டேன். நீ ஏன் அண்ணனை திட்டுனனு கேட்டேன். அவர் அமைதியாக இருந்தாரு. அதேபோல் விஜயகாந்த் அண்ணன் எதிர்க்கட்சி தலைவரா இருந்தப்ப, ஒருநாள் நான் ரோட்டுல நிக்கிறப்ப என்ன பார்த்து பேசினாரு. விடிவேலு என்ன பண்ணுறாரு, நடிக்க சொல்லுடா, அவர் இல்லாம போரடிக்குதுடானு என்னிடம் சொன்னார். இதை வடிவேலுவிடம் நான் கூறியபோது, "கேப்டன் அப்படியா சொன்னாருனு ஆவலா கேட்டாரு" வடிவேலுக்கும், அண்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ரசிகர்கள்தான் மோதிக்கொண்டார்கள்" என்று முடித்தார் சுப்பராஜ்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe