Published on 20/11/2019 | Edited on 20/11/2019
பல்வேறு விருதுகள் பெற்ற மலையாள நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்த காரணத்திற்காக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்னைக்கு செல்ல கொச்சின் விமான நிலையம் வந்தபோது மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீனிவாசனின் உடல் நிலை சற்று தேறிய பிறகு ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்லபடியாக உடல்நலம் தேறி வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.