ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பயம் எங்களுக்கில்லை... நடிகர் வெளியிட்ட பகீர் வீடியோ!

11:45 PM Jan 30, 2020 | suthakar@nakkh…

சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி பல்வேறு நாடுகள் தங்களின் விமானங்களை சீனாவுக்கு அனுப்ப தயங்கி வருகின்றன.

ADVERTISEMENT


இந்த வைரஸ் வௌவால் மற்றும் விலங்களின் இறைச்சிகளில் இருந்து பரவுவதாக கூறப்பட்டுவரும் நிலையில் குட்டி எலிகளை இளைஞர் ஒருவர் சாப்பிடுவது போன்ற வீடியோவை நடிகர் ஸ்ரீமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர் ஒருவர் ஒன்றன்பின் ஒன்றாக எலி குஞ்சுகளை மதுவில் தொட்டு சாப்பிட்டுகிறார். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு சீன அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் விலங்குகளின் மாமிசங்களை இளைஞர்கள் விரும்பி சாப்பிடுவது ஏங்கே போய் முடிமோ? என்று அந்த வீடியோவிற்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT