Advertisment

புது அறிவிப்புடன் சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ

actor sri release a novel

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. பின்பு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ உள்ளிட்ட சில படங்களில் படித்தார். கடைசியாக கடந்த 2023ஆம் அண்டு வெளியான ‘இறுகப்பற்று’ படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆளே மாறிப் போன வித்தியாசமான தோற்றத்தில் ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் உலா வந்தது. இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீ-யின் குடும்பத்தினர், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கம் மூலம் பகிர்ந்திருந்தார். மேலும் ஸ்ரீ, நிபுணத்துவ மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து ஸ்ரீ குறித்த தகவல்கள் எதுவும் வராமல் இருந்தது.

Advertisment

இந்த சூழலில் தற்போது ஸ்ரீ பூரண குணமடைந்துள்ளதாக தெரிகிறது. அவர் தற்போது ஒரு ஆங்கில நாவல் எழுதியுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எழுதிய நாவலின் தலைப்பு ‘மே ஐ கம் இன்’ என்றும் அமேசான் கிண்டில் தளத்தில் அதை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பழையபடி புது தோற்றத்தில் காட்சியளித்தார். இது அவரைப் பற்றி கவலைப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

actor shri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe