Advertisment

"சேதுபதிக்கு அப்புறம் அயலி தான் எனக்கு நல்ல ரீச்" - நடிகர் ஶ்ரீனிவாசன் நெகிழ்ச்சி

actor sreenivasan speech at ayali Success Meet

முத்துக்குமார் இயக்கத்தில் எஸ்.குஷ்மாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபி நக்‌ஷத்ரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் கடந்த மாதம் வெளியான நிலையில், பலரது பாராட்டை பெற்று வருகிறது. இந்த வெற்றியின் காரணமாக படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்து வெற்றிவிழாவைக் கொண்டாடினர். அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

Advertisment

நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, "பெண்களின் அதிகாரத்தையும்அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி. இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைசுமூகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர்'' என்றார்.

Advertisment

நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில், ''இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். சேதுபதிக்கு அப்புறம் அயலி தான் எனக்கு நல்ல ரீச் கொடுத்தது" என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது, ''இந்தக் கதையை நம்பிய ஒட்டுமொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்தத்தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்'' என்றார்.

actor web series
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe