/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/247_2.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நேற்று (10.3.2022) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த பலரும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை கூறியுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சூரி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் பாண்டிராஜுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆம்பள பிள்ளைக அழகூடாதுன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக , இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் @pandiraj_dir க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆம்பள பிள்ளைக அழகூடாது ன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக , இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க.#EtharkkumThunindhavanpic.twitter.com/AQW8vMcFOu
— Actor Soori (@sooriofficial) March 10, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)