Advertisment

"தல தலதான்" - தோனியை புகழ்ந்த பிரபல நடிகர்  

actor soori praises MS Dhoni

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய(21.4.2022)போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பைஇந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைஎடுத்து. இதனைத்தொடர்ந்து156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இறுதி நேரத்தில் கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் தோனி தனது அதிரடி ஆட்டத்தை காட்டிசென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வெற்றி வாகை சூடி கொடுத்தார். இதனைவிளையாட்டு ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தோனி ரசிகரும், நடிகருமான சூரி நேற்றையஆட்டத்தை வீட்டில் இருந்து பார்த்துள்ளார். அப்போது கடைசி ஒரு பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில் தோனி தனக்கே உரித்தான ஃப்னிஷிங் ஸ்டைலில்ஃபோர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதைப் பார்த்த சூரி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவைதனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்து "தல தலதான்"என்று குறிப்பிட்டுள்ளார்.

actor soori csk vs mi ipl 2022 MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe