actor soori act with nivin pauly new film directed by ram

Advertisment

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய ராம், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ என அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட வெற்றிப்படங்களை இயக்கி, தமிழின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர், அடுத்தாக நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, யுவன் இசையமைக்கிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ள நிலையில் இன்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பானபுகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூரி, "இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி"எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும்வெளியிட்டுள்ளார்.