sonu sood

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தனது சொந்த ஊர்களுக்குத் திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனு சூத் பத்து சொகுசு பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

Advertisment

கரோனாவால் தேசிய ஊரடங்கு உத்தரவு கடந்த மூன்று மாதங்களாக அமலில் உள்ளது. இதனால் பல தினக்கூலி பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூத், அப்படிச் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்துள்ளார். தானேவிலிருந்து சில பேருந்துகள் திங்கட்கிழமை அன்று கர்நாடகாவின் குல்பர்கா பகுதிக்குச் சென்றது. இவர்களை வழியனுப்பி வைக்கவும் சோனு சூட் பேருந்து நிலையம் வந்திருந்தார்.