Advertisment

நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் மரணம்

actor sivanarayanamurthy passed away

தமிழ் சினிமாவில் பல்லாண்டு காலமாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சிவநாராயாணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.

Advertisment

நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சிவநாராயணமூர்த்தி. குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிகமாக போலீஸ் வேடங்களில் நடித்துள்ளார்.

Advertisment

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரான சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்றிரவு (7/12/2022) 8.30 மணியளவில் மரணமடைந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரிலேயே நாளை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர். அவரது ஊரிலிருந்தும் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

sivanarayanamurthy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe