கன்னட சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவு இந்திய திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, புனித் ராஜகுமாரின்உடல் யஷ்வந்த்பூர் அருகிலுள்ளகண்டீரவா ஸ்டூடியோஅலுவலகத்தில் தந்தை ராஜ்குமார் சமாதிக்குப் பக்கத்தில்அரசு மரியாதையுடன் நல்லடக்கம்செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமார் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புனித் ராஜ்குமாரின்மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நடிகர் திரைப்படத்தில் மட்டும் ஹீரோவாக இருக்கக் கூடாது, இவரைப் போல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும். புனித் ராஜ்குமாரின்மறைவு திரைத்துறையினருக்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது" என தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, புனித் ராஜ்குமாரின்சகோதரர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான 'வஜ்ரகயா' படத்தில் ஒரு பாடலுக்கு சிவராஜ்குமாருடன்இணைந்து சிவகார்த்திகேயன் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.