simbu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருதல், தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சிம்புவின்மீது இருந்தநிலையில், கரோனா நெருக்கடி நிலைக்குப் பிறகு சிம்பு தனது பாணியை மொத்தமாக மாற்றியுள்ளார்.

Advertisment

30 கிலோவிற்கும் மேல் தனது உடல் எடையைக் குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தை ஒரு மாத காலத்திற்கும் குறைவான நாட்களில் முடித்துக் கொடுத்தார். அதன்பிறகு, அவ்வப்போது சிம்பு வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவந்தன.

Advertisment

அந்த வகையில், தற்போது சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.