"நானே எதிர்பார்க்கல" பிக்பாஸில் களமிறங்கிய சிம்பு

actor simbu host biggboss ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக தற்போதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. மேலும், பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹாட் ஸ்டார் நிறுவனம் சிம்புவின் ப்ரோமோ விடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்டெயிலாகவும் மாஸாகவும் தோன்றும் சிம்பு ரசிகர்களிடம் எதிர்பார்க்கலல? நானே எதிரிப்பார்க்கல என சிரிக்கும் இந்த ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

actor kamal hassan actor simbu bigg boss
இதையும் படியுங்கள்
Subscribe