Advertisment

"உங்கள் அன்பிற்கு அடங்கி மகிழ்கிறேன்" - அறிக்கை வெளியிட்ட சிம்பு!

Actor silambarasan thanked maanaadu movie team and fans

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இறைவன் மீதும், உழைப்பு மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் ‘மாநாடு’. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திட வேண்டும்என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. ‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப்பெரிய வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அற்புதமான இயக்கத்தை தந்தவெங்கட் பிரபு, அனைத்து தொழில்நுட்பகலைஞர்கள், ‘மாநாடு’ படக்குழு, என் தாய் தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், என் இரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் உணர்வுகளை அடக்கிவிட முடியாது. ஆனால்பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தை இல்லை. ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கி கொண்ட உங்கள் அன்பிற்கு நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துக்களும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

maanadu venkat prabhu Simbu actor simbu maanaadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe