Advertisment

சூப்பர்ஹிட் பேய் படத்தின் இரண்டாம் பாகம்; டீசரை வெளியிடும் சிம்பு !

actor silambarasan release sivi2 movie teaser

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்ததுசிவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் பேரன்யோகி மற்றும் தேஜா சரண்ராஜ் இருவரும் கதாநாயகனாக நடிக்கின்றனர்.எஸ் ஜே சூர்யா வின் வியாபாரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகி பின்னர் 'குக்கூ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்ரி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'சிவி 2' படத்தின் டீசரை நடிகர் சிலம்பரசன் நாளை மாலை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor simbu sivi 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe