Advertisment

சூப்பர் ஹிட் பட  இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு?

actor silambarasan joining director Ashwath Marimuthu next movie

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர்அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாககூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இயக்குநர்அஸ்வத் மாரிமுத்து தற்போது 'ஓ மை கடவுளே' படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிமேக்செய்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு சிம்பு நடிக்கும் படத்தில் கவனம் செலுத்துவார்என கூறப்படுகிறது.

Ashwath Marimuthu oh my kadavule actor simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe