Advertisment

“மிகவும் வெட்காம இருக்கிறது”- ஈ.பி.எஸை கடுமையாக விமர்சித்த சித்தார்த்...

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

Advertisment

sdiharth

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருவதை ஏற்க முடியாது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “எனது மாநிலத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததின் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான நிறத்தையும், அவரது நேர்மையையும், அதிகார பலத்திற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவர் என்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் உங்களுடைய அரசு பொறுப்பு, அதுவரையில் தற்காலிக அதிகாரத்தை அனுபவையுங்கள்.

Advertisment

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக ஆதரித்திருக்க மாட்டார். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அதிமுகவின் கொள்கையை எப்படி மாற்றியது” என்று பதிவிட்டுள்ளார்.

Edappadi K Palaniswamy sidharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe