Skip to main content

சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Actor Siddharth has madecontroversial comment about saina nehwal

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிர டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நடிகர் சித்தார்த்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  இதனிடையே நடிகர் சித்தார்த் தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் தமிழக வருகை? பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழகத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் தனிப்பெருமை வாய்ந்தது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 50 வருடங்களாக இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களே பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற 35வது பட்டமளிப்பு விழாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியன் நிசாந்த் கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். அதன்பின்பு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

 

இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குவதுடன் 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

 

Prime Minister attending graduation ceremony Gandhigram University

 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் காந்திகிராமம் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரதமர் கலந்துகொள்ள உள்ள பட்டமளிப்பு விழா அரங்கம் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பாதைகளை ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் பிரேம்குமார், வட்டாட்சியர்கள் சரவணன், தனுஷ்கோடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமை நில அளவர் அருண்பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயலட்சுமி, ராஜலட்சுமி, விஜய்ஆனந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

Next Story

"ஒரு நாள் லீவ் எடுத்துக்கோங்க சார்" - பிரதமர் மோடி மீது பரிவு காட்டிய ஷாருக்கான்

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

Shah Rukh Khan wishes pm modi

 

பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உலகத்தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும், தொலைபேசி, சமூக வலைத்தளம் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நமது நாட்டு மக்களின் நலனுக்கான உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் எல்லா இலக்குகளையும் அடைய உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்கட்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.