actor Shirish  helped silambam artists

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர்ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மெட்ரோ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ஷிரிஷ், ராஜா ரங்குஸ்கி பிளட் மணி படத்தில் நடித்திருந்தார். இவர்நடிப்பை தாண்டி பல வகைகளில்உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில்தற்போது அவர், தமிழகத்தைசேர்ந்த இரண்டு சிலம்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக நடிகர் ஷிரிஷ் கூறுகையில்," 11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய இரு திறமையான குழந்தைகளை பற்றியசெய்தியைஎனது நண்பர் மூலம் அறிந்தேன். இந்த இரு குழந்தைகளின் திறமையையும்,சாதனையையும் பார்த்த பிறகு உண்மையில் ஆச்சரியம்அடைந்தேன். நான்சி எஸ்தர் மற்றும்அபிஷேக ராஜன்இருவரும் பல மாவட்ட மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்களைவென்றுள்ளனர். அவர்களிடம் திறமை இருந்த போதிலும், அடுத்த வாரம் நேபாளத்தில் நடிக்கவிருந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது. அதனால் அவர்கள் இருவரும்சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினேன். இதற்காகநான்சி எஸ்தர் மற்றும்அபிஷேக ராஜன்ஆகிய இருவரின் பயணம் மற்றும் தாங்கும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை ஊக்குவிப்பதற்காக இது போன்ற உதவியை தொடர்ந்து செய்வேன் எனத்தெரிவித்துள்ளார். நடிகர் ஷிரீஷின்இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.