shanthanu

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருப்பது வாரிசு அரசியல். தற்போது தமிழ் சினிமாவிலும் இப்பேச்சு விவாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நடராஜ் அண்மையில் ட்விட்டரில், “தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் குழு அரசியல் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயிக்கிறார்கள். யாரு நீங்க?" என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இதற்கு ரீ ட்வீட் செய்திருந்த நடிகர் ஷாந்தனு, “வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள்தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், தங்கள் தரத்தை அதிகரிக்க மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்கள்” என்று ட்விட்டரில் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.