உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக்கடக்கவுள்ள நிலையில் 68 பேர் இந்தத் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இதனிடையே பிரதமர் மோடி நேற்று காலை ஒன்பது மணிக்கு அறிவிப்பை வெளியிட்டார்.அதில், “ஏப்ரல் 5ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் அகல்விளக்கு அல்லது கேண்டில் ஏற்றுங்கள் அல்லது டார்ச் லைட் ஒளி காட்டுங்கள்” என்று தெரிவித்தார்.
இதன்பின் இந்த அறிவிப்பைக்கலாய்த்துப்பல மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன.அதில் ஒரு மீம் வீடியோவை ஷாந்தனு பதிவிட்டிருந்தார்.அதற்கு அவரை பாஜகவினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.அதன்பின் இதற்கு விளக்கம் தரும் வகையில் ஷாந்தனு ட்வீட் செய்துள்ளார்.அதில், "பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றும் கோரிக்கை நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது. நம்பிக்கை,ஒற்றுமை,நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை அது கொண்டுவரும். ஒரே கோரிக்கை என்னவென்றால் தயவுசெய்து போனமுறை கூட்டமாக வெளியே வந்து குழுமியது போல முட்டாள் தனமாக எதையும் செய்துவிட வேண்டாம் என்பதே.புரிந்து கொள்ளாத,பாதுகாப்பு உணர்வற்ற, அப்பட்டமாகக் குரைக்கத் தொடங்கியிருக்கும் முட்டாள்கள் இந்தப் பதிவைப் படியுங்கள். இதுதான் அதற்குப் பின்னால் உள்ள அர்த்தம்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)