/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sharuk nayan.jpg)
பாலிவுட் நடிகர் ஷாருக்கான்‘ஜவான்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை தமிழின் முன்னணி இயக்குநரான அட்லீஇயக்கியிருக்கிறார்.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 7-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/S N in.jpg)
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன் மகளுடனும், நடிகை நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். எப்போதும் கோட் சூட் உடன் இருக்கும் ஷாருக்கான் வெள்ளை உடையில் பட்டு அங்கவஸ்திரம்போட்டிருந்தார். திருப்பதியில் சாமி கும்பிடச் சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)