பருத்திவீரன் படப் புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார்.
பருத்திவீரன் படத்தில் 'பிணந்தின்னி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானநடிகர் செவ்வாழை ராசு. இதற்கு முன்னதாகவே பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் மைனா, கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 70 வயதில் காலமாகியுள்ளார். செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.இவரது மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.