அறிமுக இயக்குநர் என்.எஸ்ராகேஷ்இயக்கும் தடை உடை படத்தில்பாபிசிம்ஹாநடித்துவருகிறார். கதாநாயகன், வில்லன்எனக்கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடிக்கும்பாபிசிம்ஹாதடை உடை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாகமிஷாநராங்நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் செந்தில் மற்றும் அவரது மகன் மணி பிரபு முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர்.ஆக்ஷன்த்ரில்லர்ஜானரில்கிராமத்துகதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில்நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் செந்திலும், அவரதுமகன் மணி பிரபுவும் இன்று கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை விரைந்து முடித்துடீசர்மற்றும்ஃபர்ஸ்ட்லுக்அறிவிப்புகளை அடுத்தடுத்துவெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.