Skip to main content

“தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்”- நடிகர் சதீஷ் கண்டனம்!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

simbu

 

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள். 600க்கும் மேற்பட்டோர் மாற்று சமூகத்தினர் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார், ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் 1 உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்றுச் சமூகத்தினர்.

 

ஊராட்சித் தலைவர் ஆதிதிராவிடர் சமூகம் என்பதால் அவரை ஊராட்சி கூட்டத்தின்போது துணைத் தலைவர் மோகன்ராஜா தரையில் அமர வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, இந்த விவகாரம் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அளவிற்கு அறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

மேலும், கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரை கொடி ஏற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜா தடுத்து தாங்களே தேசியக்கொடியை ஏற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. நகைச்சுவை நடிகரான சதீஷ் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு நடைபெற்ற அவலத்தை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சி தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் சினிமாவுக்குள் வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன்” - சதீஷ்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
sathish about vijay

வெங்கி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. இதில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது பேசிய சதீஷ் நிறைய பேருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் கையிலிருந்துதான் இயக்குநர் இப்படத்திற்கான செக் வாங்கினார். அவர் தீவிர விஜய் ரசிகர். விஜய் சார் கட்சி பெயர் அறிவிப்பதற்கு முன்னாடி நாள் என்னை அழைத்திருந்தார். பார்த்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட்டுப்பா...’. இந்த வார்த்தை அவர் சொல்லி கேட்கும்போது, உண்மையிலே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவர் காஞ்ஜூரிங் கண்ணப்பன் பார்த்திருக்கார், அதை பற்றி என்னிடம் பேச வேண்டும் என நினைத்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய ஒரு வெற்றியாக இருந்தது. நான் சினிமா வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன். அவர் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒரு ரசிகனாக அவர் அரசியலிலும் வெற்றி பெற வேண்டிக்கிறேன்” என்றார்.

கான்ஜூரிங் கண்ணப்பன் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. சதிஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பேய் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அமுதன் சினிமேட்டிக் யூனிவர்ஸ் - கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி பட ப்ரோமோ

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

vijay antony raththam movie new promo

 

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தம்' . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வருகிற 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. 

 

அந்த வகையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை இயக்குநர் அமுதன் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ஆண்டனி ரத்தம் பட கெட்டப்புடன் மழையில் நடந்து செல்கிறார். அப்போது சதீஷ், தமிழ் படம் 2 பட கெட்டப்பில் விஜய் ஆண்டனியை இடித்து விடுகிறார். பின்பு அமுதன் சினிமேட்டிக் யூனிவர்ஸ் இருப்பதாகவும் அதற்காக வந்ததாகவும் கூறுகிறார். இந்த ப்ரோமோஷன் வீடியோ தற்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

அமுதன், கடந்த 2018 ஆம் ஆண்டு சிவா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ் படம் 2 எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.