Advertisment

சசிகுமார் படத்தில் நடிக்கும் முன்னாள் சிறை கைதிகள்!

sasikumar

Advertisment

இயக்குனர் அனீஸ் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடித்து வரும் படம் 'பகைவனுக்கு அருள்வாய்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி நடிக்கின்றனர். நாசர், ஜெயபிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில், சிறை கைதிகளின் வாழ்க்கை முறை பற்றி சில முக்கிய காட்சிகள் இருப்பதாகவும், கதையின் உண்மைத் தன்மைக்காக முன்னாள் சிறை கைதிகள் சிலரை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கன்னடத் திரைப்பட நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe