
கர்நாடக திரைத்துறையில் பவர் ஸ்டாராக அறியப்பட்ட புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் இறப்பு இந்தியத்திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் உயிரிழந்ததால், சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.முன்னணி நடிகர் பிரபுதேவா, சரத்குமார், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நடிகர் சரத்குமார் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்துகதறி அழுதார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற சரத்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமார் தன் குடும்பத்துடன் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)