Skip to main content

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் சரவணன்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

saravanan

 

தமிழ் சினிமாவில் 1990-களின் காலத்தில் நாயகனாக வலம் வந்த நடிகர் சரவணனுக்கு, மறுபிரவேசத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த படம் 'பருத்தி வீரன்'. இயக்குனர் அமீர் இயக்கத்தில், 2007-ம் ஆண்டு வெளியான இப்படத்தில், சரவணன் ஏற்று நடித்திருந்த 'செவ்வாழை' என்ற கதாபாத்திரம் பரவலாகப் பேசப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சரவணனுக்கு பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

 

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சரவணன் போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சரவணன் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்!

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Actor Saravanan's wife complains about him!

 

தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டை விட்டு தன்னை வெளியே போகச்சொல்லி நடிகர் சரவணன் மிரட்டுவதாக அவரது மனைவி தலைமைச் செயலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

நடிகர் சரவணனின் மனைவியான சூர்யா ஸ்ரீ, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தன் சம்பாத்தியத்தில் இருந்த சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பின் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “என்னை காதலித்து கல்யாணம் செய்தார். பருத்தி வீரனுக்கு முன்பு அவரிடம் ஒன்றுமே இல்லை. பிரச்சனையில் கைகளில் பணமே இல்லாமல் இருந்தார். நான் சம்பாதித்து நான் தான் அவரை பார்த்துக்கொண்டேன். இதை அவரே பல பேட்டிகளிலும் பிக்பாஸிலும் சொல்லியுள்ளார். என்ன பிரச்சனை வந்தாலும் சரவணனும் அவர் தொடர்பில் இருந்த அந்த பெண்மணியும் தான் காரணம். இப்போது என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்றார்.

 

 

Next Story

ஆதரவு யாருக்கு? - பாஜக எடுக்கப் போகும் முடிவு

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Annamalai consultation on Erode East by-election

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

 

அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை தமாகா மட்டுமே தற்போது அதிமுக இபிஎஸ் தரப்பை ஆதரிக்கிறது. பாஜக தனது ஆதரவை இன்னும் சொல்லாத நிலையில் மற்ற கட்சிகள் அதிமுகவை ஆதரிப்பதாக தற்போது வரை சொல்லவில்லை. இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் கேட்ட பொழுது இரட்டை இலைச் சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே ஆதரவு எனக் கூறியிருந்தார்.

 

மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் நிச்சயம் தனது வேட்பாளரை அறிவிப்பார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவை பாஜக நாளை எடுக்க உள்ளது. 

 

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி நாளை மாலை 3 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.