Advertisment

"அஜித் ரொம்ப கெத்துன்னு நினைச்சேன். ஆனா..." - நடிகை சரண்யா பொன்வண்ணன் எக்ஸ்க்ளூசிவ்

தமிழ் சினிமாவில்'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள்மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனானநடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அஜித் குறித்து அவர் பேசிய பகுதி...

Advertisment

saranya ponvannan

"இயக்குனர் விஜய் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எனக்கு ரொம்பவும் பிடித்த இயக்குனர். 'கிரீடம்' பண்ணும்போது அஜித்துடன் முதன் முறையாக நடித்தேன். நான் அப்போது அஜித்தைபயங்கர அழகு சுந்தரன், கெத்தா இருப்பார், ஷூட்டிங்கில்அவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், அவர் ஒரு குழந்தை. தங்கமான மனசு இருக்கின்ற குழந்தை அஜித். என்னை கேட்டால் அழகன் என்றால் அவர்தான். வெள்ளைக்காரங்களைபோல நம்மூரில் அவரை மட்டும்தான் காட்ட முடியும். அப்படிப்பட்ட அழகுடன், இவ்வளவு ரசிகர்களுடன்இருக்கின்ற ஆள், மிகவும் சிம்பிளாக 'டவுன் டு எர்த்' மனிதராக இருந்தார். அவருக்கு எழுதப்பட்ட டயலாக்காக இருந்தாலும் சில நேரம் அதைநான் சொன்னா நன்றாக இருக்கும் என்று அதை என்னை சொல்ல சொல்வார். அந்த அளவுக்கு நமக்கு இடம் கொடுப்பார்.இதெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதையெல்லாம் அவரிடம் நான் ரொம்ப ரசிச்சேன், நெகிழ்ந்தேன்."

ACTOR AJITHKUMAR ajith saranyaponvannan
இதையும் படியுங்கள்
Subscribe