Skip to main content

"நடிக்கிறேன்னு சொன்னபோது வேண்டாம் என்றார்கள்; ஆனால்..." - நடிகர் சாண்டி பேச்சு!  

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Sandy

 

டி. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக் களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குநரான சாண்டி, இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 21ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

 

ad

 

அந்த சந்திப்பில் நாயகன் சாண்டி பேசுகையில், "3:33  நாயகனாக எனது முதல் படம். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன். ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார். இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துருதான். இந்தப் படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம்தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். பத்திரிக்கையாளர்கள்தான் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் " எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆட வைத்துப் பார்க்க ஆசை” - நிறைவேறிய மகிழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Sandy latest speech

 

காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 

விழாவில் நடன இயக்குநர் சாண்டி  பேசியதாவது, “எனக்கும் ஆர்யாவுக்கும் பல ஆண்டுகளாக நட்பு இருக்கிறது. ஆர்யா டார்லிங்கை ஜாலியான, அதிக டான்ஸ் உள்ள ஒரு பாடலில் ஆட வைத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. விருமன் படத்தில் என்னுடைய பணி முத்தையா சாருக்கு பிடித்ததால் இந்தப் படத்துக்கும் என்னை அழைத்தார். படத்தின் ஓபனிங் சாங்குக்கு நான் நடனம் அமைத்துள்ளேன். நான்கு நாட்கள் நடந்த ரிகர்சலில் ஆர்யா கடுமையாக உழைத்தார். மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்.

 

முத்தையா சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வைக்கும் சென்டிமென்ட் சிறப்பாக இருக்கும். அது இந்தப் படத்திலும் நிச்சயம் ஜெயிக்கும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
 

 

Next Story

'தளபதி 67' அப்டேட் - கமிட்டான பிரபல ஹீரோயின்.. ஆனா ஹீரோயின் இல்ல...

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

thalapathy 67 update priya anand and sandy master on board

 

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.

 

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில் தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக அறிவித்த படக்குழு, அடுத்ததாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரபல ஹீரோயினாக வலம் வரும் இவர் இப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் அல்லாமல் முக்கிய கதாபாத்திரம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படத்தில் திரிஷா கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அதனைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது தனி விமானம் மூலம் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது.