/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sa-hassan.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ. ஹாசன் கடந்த திங்கள்கிழமை அன்று கரோனாவால் மரணமடைந்துள்ளார். அவர் துபாயில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார். இவர் 'ஹலோ துபாய்காரன்' என்ற படத்தைத்தயாரித்து நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கரோனா தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர். இதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி 51 வயதில் காலமாகியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா இருப்பதைக் கண்டறிந்தனர். பின்பு அவரது நிலைமை மிகவும் மோசமாக, வேறு மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகர் ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)