Advertisment

actor redin kingsley debut Telugu movie

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் 'தி வாரியார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்க ரெடின்கிங்ஸ்லி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எதர்க்கும் துணிந்தவன்', விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து அடுத்ததாக லிங்குசாமிஇயக்கும் 'தி வாரியார்' படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.