Published on 25/07/2020 | Edited on 25/07/2020

நடிகர் ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் ராணா. இவர் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபாட்டியின் அண்ணன் மகன் ஆவார். இவருடைய தந்தையும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் 'காடன்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இதன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மஹீமா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹைதரபாத்தில் தனது இல்லத்தில் திருமணத்தை நடத்த உள்ளார்.