நடிகர் ராணா டகுபதி தொடர்பான வழக்கு; விசாரணை நடத்தாததால் நீதிமன்றத்தை நாடிய மனுதாரர்

Actor Rana Daggubati land grabbing case Petitioner approached court due to lack of investigation

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா டகுபதி, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த சூழலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில்,ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனது நிலத்தை காலி செய்ய வற்புறுத்தியதாகவும் ரவுடிகளைக் கொண்டு தன்னைத் தாக்கிக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்குதொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கூறி, நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையில் ராணா, சுரேஷ்பாபு உள்ளிட்ட சிலர் மீது நாம்பள்ளி நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் ராணா மற்றும் சுரேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe