shankar

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், கடைசியாக இயங்கிவந்த இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் படம் இயக்கவுள்ளார். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

Advertisment

இது நடிகர் ராம் சரணின் 15ஆவது படமாகும். இப்படத்தின் ஆரம்பகட்டப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கரை சென்னையில் நேற்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் தயாரிப்பாளர் தில் ராஜுவும் உடனிருந்தார். அந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், 'ராம் சரண் 15' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.