elephant

கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக்கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Advertisment

இதனைத் தொடர்ந்து வாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை அடுத்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பலரும் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் 'கேங்ஸ் ஆஃப் வசிபூர்2', 'நியூட்டன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இது மிகவும் கொடூரமான சம்பவம். கேரள முதல்வர் இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.