Advertisment

"பிரச்சனைக்குத் தீ மூட்டுவதில் யாருக்கோ, ஏதோ உள்நோக்கம்" -நடிகர் ராஜ்கிரண் காட்டம்!

raajkiran

Advertisment

சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகிறனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் நடிகர்ராஜ்கிரண் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, "கந்தர் சஷ்டி கவசம்" என்பது, "ஒரு பாதுகாப்பு அரண்". இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, "நம்பாமை" என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, "நம்புதல்" என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.

இந்தக் கொடியகரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய்ப் பயத்தோடும், பொருளாதாரச் சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கானமக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

actor Rajkiran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe